மயிலாடுதுறை அருகே குத்தாலத்தில் உள்ளம் தேடி இல்லம் நாடி பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏழை எளிய குடும்பத்தினருக்கு 100 பேருக்கு காய்கறிதொகுப்பினை வழங்கினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளம் தேடி இல்லம் நாடி பிரச்சார பயணம் மேற்கொண்டார். அதன் ஒருபகுதியாக மயிலாடுதுறை அருகே குத்தாலம் பகுதியில் பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினரும் விஜயகாந்தின் தீவிர ரசிகருமான வைத்தியலிங்கம் ஏற்பாட்டின் பேரில் ஏழை எளிய மக்களுக்கு காய்கறிகள் அடங்கிய தொகுப்பினையும் வழங்கினார். குடும்பத்திற்கு தேவையான காய்களை நூற்றுக்கும் மேற்பட்ட குடுமபத்தினருக்கு பிரேமலதா விஜயகாந்த் இலவசமாக வழங்கினார். அப்பொழுது பெண்கள் பிரேமலதா விஜயகாந்த் உடன் குழுபுகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தேமுதிக பொருளாளர் சுதீஷ், மாவட்ட செயலாளர் பாலு, நிர்வாகிகள் மணி, கிருஷ்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
