குடும்ப ஓட்டை முதலில் உறுதி செய்யுங்கள்.
மயிலாடுதுறையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் (பாகம் 2) மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் பங்கேற்று அறிவுரை:-
மயிலாடுதுறையில் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் பூத் கமிட்டி கூட்டம் (பாகம் 2) நடைபெற்றது. மயிலாடுதுறை தெற்கு ஒன்றியம் அதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் எம்எல்ஏவும் மாவட்ட செயலாளருமான எஸ். பவுன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
பூத் கமிட்டியில் உறுப்பினர்களின் செயல்பாடுகள், வாக்குகளை எவ்வாறு சேகரிப்பது, வீடு வீடாக சென்று அதிமுகவின் சாதனைகளை விளக்கி அதிமுக வாக்கு வங்கியை அதிகரிக்க செய்வது, வாக்காளர்களிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறைகள் குறித்தும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். தமிழக அரசின் மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ள வாய்ப்பை பயன்படுத்தி திமுகவில் பாதகங்களை எடுத்துக் கூறி வாக்குகளை திறம்பட சேகரிக்க ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலகட்டத்தில் அதிமுகவினர் முதலில் குடும்ப ஓட்டுகளை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எம்.ஆர் எஸ். சங்கர், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் நாஞ்சில் கார்த்தி, தெற்கு ஒன்றிய பொருளாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
