மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவிய போட்டி. திரளான மாணவ மாணவிகள் பங்கேற்பு. காலால் ஓவியம் வரைந்து அசத்திய கல்லூரி மாணவி:-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி வண்ணம் பந்தலில் உள்ள தனியார் அரசு உதவி பெறும் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் செவித்திறன் குறைபாடுடையோர், இயக்கத்திறன் குறைபாடுடையோர், அறிவுசார் குறைபாடுடையோர், புறயோக சிந்தனையற்றோர், மூளை முடக்குவதால் பாதிக்கப்பட்டவர்கள், பார்வை குறைபாடு உடையவர்கள் ஆகிய மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர். 10 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர்,18 வயதுக்கு மேற்பட்டோர் என மூன்று பிரிவுகளில் இப் போட்டிகள் நடைபெற்றது. இரண்டு கைகளையும் இழந்த கல்லூரி மாணவி காலால் ஓவியம் வரைந்து அசத்தியது அனைவரையும் கவர்ந்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

















