மத்திய அரசின் நலத்திட்ட செயல்பாடுகள் குறித்த மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட தீஷா குழு தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் DISHA , திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு தலைவரான அண்ணாதுரை தலைமையில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
மத்திய அரசும் மாநில அரசும் மக்கள் நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயனாளிகளுக்கும் மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதனை நோக்கமாகக் கொண்டது இக்குழு கூட்டம். மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற
ஜல்ஜீவன் மெஷின், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கம், பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கௌசல்யா போஜனா , பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், போசான் 2.0 , பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பணிகள் செயல்பாடுகள் குறித்தும் பணி முன்னேற்றம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு மேலும் தாமதமாக நடைபெறும் பணிகளை விரைவாக நடைபெறுவதற்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இந்தக் குழுவின் முக்கிய பணியாகிய மத்திய அரசாங்கத்தின் நிதி எந்தெந்த துறைக்கு சென்றுள்ளது என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் அனைத்து துறை வளர்ச்சி பணி திட்டங்களின் நிதி செலவினங்கள் வெளிப்பாடுகள் மற்றும் குறைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேலும் மாவட்டத்தில் நடைபெற்று வருகின்ற வளச்சி திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் , மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், அனைத்து அரசு உயர் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கு பெற்றனர்.
