ஜனநாயக போரில் துரோகிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் விரட்டியடிக்க வேண்டும் : சின்னம்மா சகோதரர் டாக்டர் திவாகரன் மன்னார்குடி கழகத் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டி….
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்த திவாகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில் தேர்தல் என்பது ஜனநாயகப் போர் இதில் துரோகிகளையும் சந்தர்ப்பவாதிகளையும் விரட்டி அடிக்க வேண்டும். முதலில் அண்ணா திமுகவிற்கு துரோகம் இழைத்தது ஓ பன்னீர்செல்வம். அடுத்ததாக எடப்பாடி பழனிச்சாமி துரோகம் இழைத்துள்ளார். சின்னம்மா சிறைக்கு செல்லும் நிலையிலும் அதிமுக ஆட்சியை தக்கவைத்துதான் சிறைக்கு சென்றார். சின்னம்மா எந்த குற்றமும் செய்யவில்லை. தினகரனை பொருத்தவரை இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கப்பட்டு கழகத் துணை பொது செயலாளர் ஆக்கப்பட்டும், ஆர் கே நகர் இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்த போதிலும் தினகரன், சின்னம்மா அரசியலில் இருக்கக் கூடாது என்பதற்காக அவரும் துரோகம் இழைத்து வருகிறார். பாட்டாளி மக்கள் கட்சி ஐயா ராமதாஸ் அவரது மகன் அன்புமணியை மத்தியில் அமைச்சராகிய போதிலும் அவரும் தற்போது தனது தந்தை ராமதாசுக்கு துரோகம் இழைத்து விட்டு அதிமுகவில் இணைந்துள்ளார். அண்ணா திமுக கூட்டணியை பொறுத்தவரை துரோகிகளின் கூட்டமாக உள்ளது. திமுக கூட்டணியை பொருத்தமட்டில் அவரவர் கட்சிக்கு துரோகம் இழைத்தவர்கள் தனது கட்சியை விட்டு விலகி தற்போது திமுகவில் இணைந்து இருப்பதை பார்க்க முடிகிறது திமுக கட்சியில் ஆட்கள் இல்லாததால் அதிமுக கட்சியில் இருந்து ஆட்களை பிடித்து கட்சி நடத்துகின்றனர். இதுதான் திராவிட மாடலா. இதுதான் தேர்தல் நடத்தும் லட்சணமா. திமுக கட்சியில் அனைவரும் அண்ணா திமுக காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் புரட்சி தலைவி பற்றியும். புரட்சி தலைவரைப் பற்றியும் அங்கு அவதூறு பேசுகிறார்கள். திமுக கூட்டணி என்பது மோசமான நபர்கள் ஒன்றிணைந்த கூட்டணி. ஆனால் சின்னம்மா தலைமையிலான கூட்டணி யாருக்கும் துரோகம் செய்யாத சுத்தமான கூட்டணியாக இருந்து வருகிறது.
திமுக கட்சியை பொறுத்தவரை அமைச்சர்களின் வாரிசு தான் பதவிக்கு வர முடியும். ஆனால் அண்ணா திமுகவில் புரட்சி தலைவியாக இருந்தாலும் ,புரட்சித் தலைவராக இருந்தாலும் சாதாரண தொண்டரையும் அமைச்சர் பதவியில் அமர்த்தினார்கள். . இன்றைக்கு அதே பாணியில் சின்னம்மா பயணித்து வருகிறார். இன்றைக்கு வெகு சாதாரண அவர்களையும் வேட்பாளராக அறிவித்துள்ளார். தற்போது மன்னார்குடி தொகுதி வேட்பாளர் ராசுபிள்ளை இரண்டு முறை நகர மன்ற பணியாற்றியவர் மேலும் பொது மக்களுக்கா பாடுபட கூடியவர். பொதுமக்கள் துரோகங்களை நினைத்து பார்த்து எதிர்ச்சதிகாரிகள் சந்தர்ப்பவாதிகள் அரசியல் இருக்கக் கூடாது என்ற சிந்தனையில் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளோம். இந்தத் தேர்தல் ஆனது கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரே மாதத்தில் வருகின்ற தேர்தல் பொறுப்பாளர்களை கூட நாங்கள் நியமிக்கவில்லை. ஆங்காங்கே குழுக்களை நியமித்து தேர்தல் பணிகளை கவனித்து வருகிறோம். எங்கள் கட்சியில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது. இந்தத் தேர்தல் ஆனது ஜனநாயக கடமைகளை ஆற்றுவதற்கும் துரோகிகளையும், எதிரிகளையும் , சந்தர்ப்பவாதிகளையும் விரட்டி அடிப்பதற்கு பணியாற்றி வருகிறோம்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் சின்னம்மா மற்றும் ஐயா ராமதாஸ் அவர்கள் வேட்பாளராக நிற்பதாக கருதி வளமான ஆன்மீக அரசியலை கொண்டு வருவதற்கு பொதுமக்கள் அனைவரும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஜனநாயக போரில் துரோகிகளையும், சந்தர்ப்பவாதிகளையும் விரட்டியடிக்க சின்னம்மா சகோதரர் Dr. திவாகரன் பேட்டி
