மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 4000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ரயில்கள் மூலம் அரவைக்காக அனுப்பி வைப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த குறுவைப் பருவத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 1,20,354 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில் 1,10,672 மெட்ரிக் டன் நெல் இதுவரை கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ள நிலையில், அவற்றை அரவைக்காக அனுப்பும் பணி துரிதகதியில் நடைபெற்று வருகிறது. மயிலாடுதுறை மற்றும் சீர்காழி ரயில் நிலையங்களில் இருந்து ரயில் வேகன்கள் மூலம் நெல் மூட்டைகள் அரவைக்காக அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் ஈரோடு மண்டலத்துக்கும், சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2000 மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் கிருஷ்ணகிரி மண்டலத்துக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

Exit mobile version