மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனையில் நடைபெறும் மருத்துவ முகாம் சீர்கேட்டை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் :-
மயிலாடுதுறை மாவட்ட தலைமை மருத்துவமனைகள் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெறும் மருத்துவ முகாமிற்கு நிரந்தரமான இடத்தினை தேர்வு செய்து மருத்துவமனையிலேயே முகாமை நடத்த வழிவகை செய்ய வேண்டும் , மாற்றுத்திறனாளிகள் பல்வேறு வகையான சான்றுகளை பெற வேண்டி இருப்பதால் அனைத்து மருத்துவர்களையும் உள்ளடக்கிய முகாமை நடத்தி அடையாள அட்டை பெற்றவர்களுக்கு UDID வழங்கிட வேண்டும். காது கேளாதோர் , வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியை சான்று பெற அலைகழிக்க செய்யக்கூடாது , நரம்பியல் மருத்துவரை மாவட்டத்தில் நியமனம் செய்து மாற்றுத்திறனாளிகளின் அலைச்சலை தடுத்திட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவமனை வாயிலில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஒன்று திரண்டு கோஷங்களை எழுப்பினர்.
