ஆசிரியர்களின் கும்மியாட்டம், கோலப்போட்டி ஆகியவற்றுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்ட தருமபுரம் ஆதீனம் பள்ளியின் சமத்துவ பொங்கல் விழா. மாணவ மாணவிகள் உற்சாகமாக பொங்கல் வைத்து கொண்டாட்டம் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இன்று சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. தொடர்ந்து பள்ளி மைதானத்தில் பெண் ஆசிரியர்கள் கும்மி அடித்து பொங்கல் கொண்டாடினர். தொடர்ந்து ரங்கோலி கோலப்போட்டி நடைபெற்றது. பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்று மஞ்சள் இஞ்சி கரும்பு ஆகியவை வைத்து புதுப்பானையில் பொங்கல் இட்டு பொங்கலோ பொங்கல் என்று உற்சாக கூக்குரல் எழுப்பி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

















