திருத்தணியில் உடல் முழுவதும் அலகு குத்தி அலங்கரிக்கப்பட்ட அம்மனை டிராக்டரில் இழுத்த பக்தர்கள் 

திருத்தணியில் உடல் முழுவதும் அலகு குத்தி அலங்கரிக்கப்பட்ட அம்மனை டிராக்டரில் இழுத்த சென்ற பக்தர்கள்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோட்டில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நேற்று தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இன்று இரண்டாவது நாளான திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கிராம பக்தர்கள் உடல் முழுவதும் அலகு குத்தி டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.

தொடர்ந்து இரவு அம்மனுக்கு கிராமத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடைபெற உள்ளது இதில் இதில் ஏராளமான கிராம மக்கள் அம்மனுக்கு தீபாரதனை செய்து கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்து வழிப்படுகின்றனர்.

18 நாட்கள் நடைபெறும் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காப்புக் கட்டி விரதமிருந்து அடுத்த மாதம் 12ஆம் தேதி மாலை கோவில் எதிரில் உள்ள அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Exit mobile version