தேவேந்திரன் முகுந்த சக்கரவர்த்தியிடம் பரம்பொருள் சிவபெருமானை மறந்துவிட்டு . தனது ஐராவதம் , வெண்கொற்றக்குடை , சிம்மாசனம் , ராஜ்யம் . இந்திராணி ஆகிய ஐந்தை தவிர எதை வேண்டுமானாலும் கேள் என்றதாள் . முகுந்த சக்ரவர்த்தி சுவாமியை தருமாறு கேட்டு பெற்றுக் கொண்டு வர . சுவாமி பூலோகத்தில் ஆறு தலங்களில் தியாகராஜபெருமாளாக தங்கி அருள்பாலித்து வருகிறார் . சுவாமி தேவேந்திரனுக்கு காட்சி கொடுத்த புரட்டாசி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் தேவ சாயரட்சை காலத்தில் திருவந்தி காப்பு எனும் தேவேந்திர தரிசன நாள் நிறைவு பணி உற்சவம் நடைபெறும் . அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பூவனூர் சதுரங்க வல்லபநாதர் ஆலயத்தில் ஆண்டுக்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் பூரட்டாதி நட்சத்திர தினத்தில் நடைபெறும் தேவேந்திரன் தியாகராஜர் தரிசனம் நிறைபணி உற்சவம் 30 ஆண்டுகளுக்கு பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது .இதில் தியாகராஜ பெருமானுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு . தீபாராதனை காண்பிக்கப்பட்டது
