சீர்காழி அருகே பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது சகோதரர்கள் நடராஜன், கண்ணன் ஆகியோருக்கு சொந்தமான நத்தம் வீட்டு மனை இருந்ததாகவும், இதனிடையே சண்முகம் நடராஜன், கண்ணன் ஆகியோர் இறந்துவிட்ட நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராமலிங்கம் என்பவர் மேற்கண்ட மூவரின் சொத்துக்களை கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி போலியாக ஆதார் கார்டுகள் தயார் செய்து சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரயப் பத்திரம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர்,
போலி ஆவணங்கள் தயாரித்து இறந்தவர்களின் சொத்தை கிரயப் பத்திரம் செய்ததாக மாவட்ட சார் பதிவாளரிடம் கடந்த 2024 ஆம் ஆண்டு – மே 20 ஆம் தேதி புகார் மனு அனுப்பியதாகவும், அதன் பேரில் அடுத்த தினமே சம்பந்தப்பட்ட கிரய பத்திரம் பதிவு செய்தவர்கள் அவர்களாகவே முன்வந்து ரத்து செய்து விட்டதாக தெரிகிறது. போலி ஆவணங்களை கொடுத்து இந்த கிரைய பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெருந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நபர்கள் மாவட்ட ஆட்சியர், மாவட்ட பதிவாளர், சீர்காழி சார் பதிவாளர் உட்பட பல்வேறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இதுவரை சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதனை அடுத்து புகார் தெரிவித்த பெருந்தோட்டம் பகுதியை சேர்ந்த நபர்கள் இன்று சீர்காழி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அறிந்த சீர்காழி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சார்பதிவாளர் மூலம் போலி ஆவணம் தயார் செய்து பத்திரப்பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்ததின் பெயரில் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது. இதனால் சீர்காழி சார் பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியதோடு சில மணி நேரம் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டது.

















