திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற..இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாய விலை கடை ஊழியர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் திருவாரூர் மாவட்டம் முழுதும் உள்ள விவசாயிகள் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளார்கள் .
“நியாய விலை கடைகளில் எடையாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், தாயுமானவர் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 130-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலர் உட்பட ஊழியர்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட நியாய விலை கடை ஊழியர்கள்.
திருவாரூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
மேலும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள். இதனால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் ,உரம் வாங்க முடியாமல் விவசாயிகள் அவதி அடைந்துள்ளார்கள்.
மேலும் தீபாவளி பண்டிகை சில நாட்கள உள்ள நிலையில் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 25 அம்ச கோரிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட கவுரவ தலைவர் மலர்வேந்தன், மாவட்ட செயலாளர் கேசவன், ‘டாக்ரியா’ மாவட்ட தலைவர் குப்புசாமி, மாவட்ட பொருளாளர் அண்ணாதுரை, மாவட்ட போராட்ட குழு தலைவர் ஐயப்பன் உள்ளிட்ட நியாய விலை கடை பணியாளர்கள், நகை மதிப்பீட்டாளர்கள், கணினி பணியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
