திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அண்ணா நகரைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் பழனிவேல் என்பவரின் மனைவி தேவி மற்றும் அவரது மாமியார் அய்யம்மாள் இடையே குடும்ப தகராறு அடிக்கடி நடைபெற்று வந்ததாக தகவல்.
பழனிவேல் – தேவிக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். குழந்தைகள் அனைவரும் பள்ளியில் படித்து வருகிறார்கள். அய்யம்மாள் தனது மகனின் வீட்டிலேயே வசித்து வந்தார்.
சம்பவத்துக்கு முன்தினம் இரவு, தேவி மற்றும் அய்யம்மாள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அய்யம்மாள் வீட்டிலுள்ள ஓர் அறையில் தூங்கச் சென்றார். ஆனால் கோபம் அடங்காத தேவி, நள்ளிரவு 1 மணியளவில் மாமியார் மீது அமர்ந்து, அவரது கழுத்தை நெரித்து கொன்றார் என்று கூறப்படுகிறது.
பின்னர், அன்று நள்ளிரவே, வேட்டவலம் காவல் நிலையத்திற்கு சென்று தேவி தானாகவே சரணடைந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.