வாட்டர் சர்வீஸ் கடைகளில் அலைமோதும் கூட்டம்! ஆயுத பூஜையை முன்னிட்டு தங்களது வாகனங்களை வாட்டர் சர்வீஸ் செய்து பூஜை செய்யும் மக்கள்!
இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு தங்களின் வாகனங்களை வாட்டர் சர்வீஸ் செய்து சந்தன பொட்டு வைத்து அதற்கு பூ மாலைகள் போட்டு பூஜை செய்வது வழக்கம். இன்று வாட்டர் சர்வீஸ் கடைகளில் அதிக அளவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் கூடுதலாக ஊழியர்களை வாட்டர் சர்வீஸ் கடைகளில் நியமனம் செய்து வாகனங்களை சர்வீஸ் செய்து கொடுக்கப்பட்டு வருகின்றது.
சிவகங்கையில் கூட்ட நெரிசல் மிக்க பகுதியான மதுரை முக்கு, பிள்ளை வயல் காளியம்மன் கோவில் பகுதி மற்றும் பெருமாள் கோவில் பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் கடைகளில் தெருக்கள் முழுவதும் சர்வீஸ் செய்யப்பட்ட வாகனங்களும், சர்வீஸ் செய்வதற்கான வாகனங்களும் வரிசை கட்டி நிற்கின்றது. ஆயுத பூஜையை முன்னிட்டு ஒவ்வொரு வாட்டர் சர்வீஸ் செய்யும் சென்டர்களிலும் இன்று ஒரு நாள் மட்டும் கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு வாகனங்களை கழுவுவது, துடைப்பது போன்ற ஒவ்வொரு பணிகளுக்கும் தனித்தனியாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வாகனங்களை வாட்டர் சர்வீஸ் செய்து துடைத்து சாலையில் நிக்க வைத்துள்ள வாகனங்கள் புதிய வாகனங்கள் போன்று பளபளப்பாக காணப்படுகின்றது.

















