Coolie First Single : கூலி படத்திலிருந்து வெளியானது முதல்பாடல்

ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தில் இருந்து முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பாடல் குறித்த கிளிம்ப்ஸ் காட்சிகள் முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் பாடல் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் கூலி என்ற படத்தில் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினியுடன் நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ், சோபின் சாகிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளதால், கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது.

Exit mobile version