தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளுகுளு கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வந்தனர் இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பொறையார்,திருக்கடையூர், செம்பனார்கோவில், சங்கரன்பந்தல்,ஆக்கூர், பெரம்பூர், உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு அவ்வப்போது தூரல் மழை பெய்து வந்தது இந்நிலையில் இன்று காலை முதல் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது இதனால் வெப்பம் முற்றிலுமாக தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.













