சென்னை: சமீபத்தில் மத்திய அரசு எடுத்த முக்கிய தீர்மானம், பொதுமக்களின் குடும்ப செலவில் சற்று சுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. கச்சா பாமாயில், சூரியகாந்தி எண்ணெய், மற்றும் சோயாபீன் எண்ணெய் ஆகியவற்றின் அடிப்படை சுங்கவரி 20% இலிருந்து 10% ஆக குறைக்கப்பட்டு, மே 31, 2025 முதல் அமலாகியுள்ளது.
எண்ணெய் விலையிலான கணிசமான மாற்றம்
இந்த வரிக் குறைப்பால், பல சமையல் எண்ணெய்களின் விலை லிட்டருக்கு ₹10 வரை குறைந்துள்ளது.
- பாமாயில் விலை:
- முந்தைய விலை: ₹135
- தற்போதைய விலை: ₹125
- 850 மில்லிலிட்டர் பாக்கெட் விலை: Old pirce: ₹126, New Price: ₹112
- சூரியகாந்தி எண்ணெய் (Sunflower Oil):
- முந்தைய விலை: ₹146 – ₹155 (850 ml)
- தற்போதைய விலை: ₹136 – ₹150
- சோயாபீன் எண்ணெய்:
- விலை குறைப்பு தோராயமாக ₹10 வரை காணப்படுகிறது.
இறக்குமரி வரி மாற்றம்:
முந்தைய நிலை:
- மொத்த சுங்கவரி = 27.5%
தற்போதைய நிலை:
- மொத்த சுங்கவரி = 16.5%
இந்த மாற்றம், சுரந்த இறக்குமதி செலவுகளை நேரடியாக எண்ணெய் விலைகளில் குறைவாக பிரதிபலிக்கச் செய்துள்ளது.
தேங்காய் எண்ணெய் மட்டும் விலை உயர்வு
விலை குறைவுகளில் இருந்து விலகி, தேங்காய் எண்ணெய் விலை சுரண்டல் அளவுக்கு உயர்ந்துள்ள நிலை தொடர்கிறது:
- முந்தைய விலை (45 நாட்களுக்கு முன்): ₹260 (per litre)
- தற்போதைய விலை: ₹400 (per litre)
- உயர்வு: ₹140 (45 நாளில்!)
காரணம்: கொப்பரைக்கு (உலர்ந்த தேங்காய்) ஏற்பட்ட கடுமையான தட்டுப்பாடு என்பதாலே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.