மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள தூய தெரசா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023,2024ம் ஆண்டிற்கான பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் கலந்து கொண்டு
2023-2024ம் ஆண்டில் இளங்கலை மற்றும் முதுகலை படித்து முடித்த 168 மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தி பேசினார் அப்போது அவர் கூறுகையில்
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பல மாநிலங்கள் இருந்தாலும் யூனியன் பிரதேசங்கள் இருந்தாலும் பெண்கள் கல்வியில் தமிழ்நாடு முதலிடம் என்ற இலக்கினை எட்டி இருக்கிறோம்
என்னுடைய தாத்தா பாட்டி கைநாட்டு என்னுடைய அப்பா அம்மா கிறுக்கி கிறுக்கி கையெழுத்து போடுவார்கள் ஓலைக் குடிசையில் விவசாயி மகனாகப் பிறந்து முதல் பட்டதாரி முனைவர் என்ற பட்டத்தை பெற்று ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறேன் என்று சொன்னால் திராவிட இயக்கமும் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா காமராஜர் கலைஞர் போன்ற தலைவர்கள் தமிழ்நாட்டின் உயர் கல்விக்கும் பெண்கள் கல்விக்கும் அயராது உழைத்ததனால் தான் நாம் இந்த நிலையை எட்டி இருக்கிறோம் என்றும் உத்தரப்பிரதேசம் பீகாரில் பெண்கள் கல்வி இல்லை சாலை ஓரத்தில் எத்தனையோ அண்டை மாநிலத்து இளம் வயது பெண்கள் பொம்மைகள் செய்வதற்கும் அர்வாள் செய்வதற்கும், ஈயம் பூசுவதற்கும் தனது மாநிலத்தில் கல்வி இல்லாததால் வயிற்று பிழப்பிற்காக தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள் எனவும் ஆனால் தமிழக பெண்கள் பிஏ பிஎஸ்சி,பிகாம், எம்ஏ, படித்து முடிப்பதற்கான பெருமை டாக்டர் கலைஞருக்கு உண்டு வீட்டில் முதல் பட்டதாரிகளுக்கு ஐந்து மதிப்பெண்கள் அரசு கூடுதலாக தரும் என கலைஞர் போட்ட உத்தரவால் கடந்த ஆண்டு விட அடுத்த ஆண்டு ஒரு லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் கிராமத்தில் இருந்து பட்டம் பெற்றனர் எனவும் தற்போது பட்டம்பெறும் அனைத்து மாணவிகளும் இன்று முதல் வாழ்வில் முன்னேறுங்கள் என வாழ்த்தி பேசினார் மேலும் இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர்
நிவேதா முருகன், முன்னாள் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் குணசேகரன்,
கல்லூரியின் தலைவர் அருட் சகோதரி செபஸ்டினா மற்றும் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி கருணா ஜோசப் பாத் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் காமராசன், மாணவிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

















