திருவாரூரில் காங்கிரஸ் சார்பில் தமிழக ஆளுநரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் காங்கிரஸ் சார்பில் தமிழக ஆளுநரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..” நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

நடைபெற்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தை பதவி ஏற்க விடாமல் தடை செய்யும் மாநில ஆளுநரை கண்டித்து.. தமிழகம் முழுதும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக..திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பாக திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்ட தலைவர் நீலன் அசோகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்.. நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் 108 சட்டமன்ற தொகுதிகளில் வென்ற விஜய் தலைமையிலான தமிழக கட்சி கழகம் அரசியலமைப்பு சட்டப்படி அதிக இடங்களை பெற்றதன் மூலம் விஜய் ஆட்சி அமைப்பதற்கு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தும்.. ஆளுநர் 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவை என ஆட்சி அமைக்க அனுமதிக்காத நிலையில்.. ஆளுநரை கண்டித்து
திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக காங்கிரஸ் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பாக மத்திய மோடி அரசில் எதிர்த்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் நீலன் அசோகன், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மண்ணை மதியழகன், மாநில செயலாளர் தாஹிர், விவசாய அணி மாநில செயலாளர் மடப்புரம் சம்பத் உள்ளிட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Exit mobile version