காங்கிரஸ் கட்சியின் சார்பில் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய கண்டனம்‌

திருவள்ளுரில், காங்கிரஸ் கட்சியின் சார்பில்
மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் NEET, CUET, CLAT, JEE போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி, மத்திய ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்‌ நடைபெற்றது,

திருவள்ளூர் அடுத்த
பெரியகுப்பம், ரயில் நிலையம் அருகே திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சசிகுமார், தலைமையில்
மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் NEET, CUET, CLAT, JEE போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில், கலந்து கொண்டு
மத்திய அரசு மாணவர்களுக்கு எதிராக கொண்டு வந்துள்ள
தேசிய தேர்வு முகமை (NTA) உடனடியாகக் கலைக்கப்பட வேண்டும்,
நீட் (NEET) போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கான தேர்வுக் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும்,
வினாத்தாள் கசிவு (Paper Leak) முறைகேடுகளுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும்.
மற்றும்
மத்திய கல்வித்துறை அமைச்சர்
தர்மேந்திர பிரதான்,
பதவி விலக வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்‌ நடைபெற்றது,

இதில்
தெற்கு மாவட்ட தலைவர் காங்கை குமார்,
ஆவடி மாநகராட்சி தலைவர் அமீத் பாபு, திருவள்ளூர் பாராளுமன்ற அமைப்பாளர் ஏஜி சிதம்பரம், உட்பட கட்சி தலைவர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version