தமிழக பள்ளிக்கல்வித்துறை நடத்திய மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு
போட்டிகளில் வெற்றி பெற்ற தனியார் பள்ளி மாணவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம சிகாமணியிடம் வாழ்த்து பெற்றனர்.
தமிழக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் நடைபெற்ற மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் விழுப்புரம் அருகேயுள்ள கப்பியாம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் சிகா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதில் மாநில அளவிலான தடகளப் போட்டியில் ஹேமபிரசாத் என்கிற மாணவர் 200 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் மற்றும் 100 மீட்டர் ஓட்டத்தில் மூன்றாமிடம் பெற்றார்.அதேபோல் மாநில அளவிலான ஜிடோ போட்டியில் (U-14) மாணவர் லோகேஸ்வரன் மூன்றாமிடம் பிடித்தார்.
மேலும் 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் ஹேமபிரசாத், கிஷோர், திவாகர், லோகேஷ்வரன் ஆகியோர் உச்சியில் இடம்பிடித்தனர். மாவட்ட அளவிலான சிலம்பம் பிரிவில் மாணவர் பரதன் (U-19) முதலிடம் பிடித்தார்.
டேக் ஹீண்டா போட்டியில் முகிலன் (U17-59), மனோஜ் (U17-73), ஜனா (U17-78) ஆகியோரும் தங்கள் பிரிவுகளில் முதலிடத்தை வென்று திறமையை வெளிப்படுத்தினர்.
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன். கௌதமசிகாமணி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


















