மயிலாடுதுறை நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட அமர்வு நீதிபதி தலைமையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1093 வழக்குகளில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய்க்கு சமரசத் தீர்வு காணப்பட்டது :-
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்கள் கூடுகின்றன. இவற்றில் குடும்பநல வழக்குள்,காசோலை வழக்குகள் மற்றும் சமரசத்திற்குரிய சிறிய குற்ற வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. மற்ற வழக்குகள் போல் இல்லாமல் ஒருவருக்கு வெற்றி ஒருவருக்கு தோல்வி என்று அமையாமல் இருவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் நீதிபதிகள் முன்னிலையில் சமரச தீர்வுகள் இந்த லோக் அதாலத் மக்கள் நீதிமன்றத்தில் ஏற்படுத்தப்படுகின்றது. இன்று தேசிய மக்கள் நீதிமன்றம் மயிலாடுதுறை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி சத்யதாரா தலைமையிலும், மாவட்டத்தின் மற்ற நீதிபதிகள் முன்னிலையிலும் வழக்குகள் நடைபெற்றன. சிவில் வழக்குகள் குற்ற வழக்குகள் மோட்டார் வாகன விபத்து கோரிக்கை வழக்குகள் குடும்ப நல வழக்குகள் ஜீவனாம்ச வழக்குகள் வங்கி சாரா கடன் வழக்குகள் தொழிலாளர் நல வழக்குகள் நில ஆர்ஜித வழக்குகள் பண மோசடி வழக்குகள் என 1093 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு ரூபாய் ஒரு கோடியே 95 லட்சத்திற்கு சமரச தீர்வு வழங்கப்பட்டது. இது பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்று என்று மாவட்ட அமர்வு நீதிபதி திருமதி சத்யதாரா தெரிவித்தார்
