மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் சாவடி தெரு, எம்ஜிஆர் நகரில் பாலமுருகன் (வயது 52) இவரது மனைவி ரேவதி (45), இவரது மகள்கள் யுகிதா (22).அபிதா (17) ஆகியோர்கள் குடும்பத்தோடு வசித்து வந்தனர். இந்நிலையில் பாலமுருகன் மனைவி ரேவதி (சத்துணவு அமைப்பாளர்) கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரேவதி தனது தாய் மூலம் செட்டில்மெண்ட் செய்யப்பட்ட வைத்தீஸ்வரன் கோயில் உள்ள வீட்டினை கணவர் மற்றும் இரண்டு மகள்கள் யாருக்கும் தெரிவிக்காமல் அலெக்சாண்டர் என்ற நபருக்கு கிரயம் செய்து விற்றுவிட்டு, பணம் பெற்று தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து புதிதாக வீட்டை வாங்கிய அலெக்சாண்டர் என்பவர் வீட்டில் ஏற்கனவே வசித்து வந்த பாலமுருகன் மற்றும் அவரது பெண் குழந்தைகளையும் வெளியேற்றி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாலமுருகன் மற்றும் அவரது மகள்கள் யுகிதா (கைக்குழந்தை பெண்) மற்றும் 17 வயது மற்றொரு மகளுடன் கடந்த இரண்டு நாட்களாக வைத்தீஸ்வரன் கோவில் பேருந்துநிலையத்தில் இரவு பகலாக பொழுதை கழித்துள்ளனர். அப்பொழுது அவ்வழியாக வந்த வைத்தீஸ்வரன் கோவில் வர்த்தக சங்க தலைவர் கண்ணன் என்பவர் கைக்குழந்தையோடு ஏன் இரண்டு நாட்களாக பஸ் நிலையத்தில் தங்கி உள்ளீர்கள் என கேட்டதற்கு நடந்த விபரங்களை கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து வர்த்தக சங்கத் தலைவர் | பாரதிய ஜனதா கட்சி மாவட்ட முன்னாள் தலைவர் வெங்கடேசன், பாட்டாளி மக்கள் கட்சி நகர செயலாளர் தில்லை கண்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஸ்டாலின், மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தீஸ்வரன் கோவில் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக ஆதரவாக சென்று புகார் மனு கொடுத்தனர். அந்த புகார் மனுவில் தங்களுக்கு சொந்தமான வீட்டை தனது தாய் யாருக்கும் தெரியாமல் அலெக்சாண்டர் என்பவருக்கு பத்திர பதிவு பதிவு செய்து கொடுத்து விட்டு தலை மறைவாகி விட்டார்.இந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மீண்டும் அந்த வீட்டில் நாங்கள் வசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட எங்களுக்கு நியாயம் வழங்க வேண்டுமென கண்ணீர் மல்க அந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை பெற்றுக் கொண்ட வைத்தீஸ்வரன் கோவில் இன்ஸ்பெக்டர் அருண்குமார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் பேரில் அனைவரும் போலீஸ் நிலையத்தை விட்டு கலைந்து சென்றனர். முன்னதாக வைத்தீஸ்வரன் கோவில் தெற்கு வீதியில் இருந்து வர்த்தக சங்க நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக போலீஸ் நிலையத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சார்பாக மனு கொடுத்தனர்
