விழுப்புரத்தில் மறந்த முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து உண்மைக்கு புறம்பாகவும், தரக்குறைவாகவும் பேசியதாக யூடியூபர் முக்தார் அகமது மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்மனு அளித்தனர்.
தமிழக வளர்ச்சிக்கு அடித்தளமிட்டு பல ஆண்டுகள் தமிழகத்தில் பொற்கால ஆட்சி வழங்கிய மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவித்து, பல ஆதாரமற்ற கருத்துக்களையும், பொய் குற்றச்சாட்டுகளையும் யூடியூபர் முக்தார் அகமது தெரிவித்து வருவதாகவும், தரக்குறைவான விமர்சனங்களையும், உண்மைக்கு புறம்பான பல கருத்துகளை பேசி நாடார் சமூகத்திற்கு தன்மான சிதைவு ஏற்படுத்தி வரும் முக்தார் அகமதை கைது செய்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு நாடார் பேரவை அமைப்பினர் அதன் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமையில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் புகார் மனு அளித்தனர். மேலும் புகார் மனு மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

















