கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ மாணவிகள்  கல்லூரி வாயில் முன்பு போராட்டம்

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி வாயில் முன்பு போராட்டம்…

திருவாரூர் பிப்,19- திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அரசு கலை கல்லூரி இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்கள், நீதிமன்றம் தீர்பளித்த யு ஜி சி நிர்ணயம் செய்த 57800 ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், 12 மாதமும் ஊதியம் வழங்க வேண்டும், மகப்பேறு விடுப்பு, பணி நிரந்தரம், ஓய்வு பெற்ற கௌரவ விரிவுரையாளர்களுக்கு பணிக்கொடை ரூபாய் 25 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக திடீரென கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளும் வகுப்பை புறக்கணித்து கௌரவ விரிவுரையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மாணவ மாணவிகளும் தரையில் அமர்ந்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் கௌரவ விரிவுரையாளர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்

Exit mobile version