மயிலாடுதுறை அருகே கல்லூரி பேருந்து வயலில் சாய்ந்து விபத்து

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கஞ்சாநகரம் கிராமத்தில் கல்லூரி மாணவர்களை அழைக்க வந்த பேருந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சாநகரம் கிராமத்தில் இருந்து தரங்கம்பாடியில் அமைந்துள்ள தனியார் மகளிர் கல்லூரிக்கு தினமும் மாணவிகளை அழைத்துக் கொண்டு பேருந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக மாணவிகளை அழைக்க வந்த பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வயலில் சாய்ந்தது. கல்லூரி மாணவிகள் யாரும் உள்ளே இல்லாத காரணத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

Exit mobile version