200 ஆண்டு பழமையான புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்… முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்துகொண்டு கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்..”
பூங்கொத்து கொடுத்து ஆசி வழங்கிய முதியோர்கள்..”
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் பகுதியில் உள்ள சுமார் 200 வருடங்கள் பழமையான புனித சூசையப்பர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது..
கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நேற்று இரவு கிறிஸ்து பிறப்பு திருப்பலி முடிந்து.. இன்று காலை கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது..
இந்த நிகழ்வில்.. திருவாரூர் அதிமுக மாவட்ட செயலாளரும்.. கழக அமைப்புச் செயலாளரும், நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் கலந்துகொண்டு.. கிறிஸ்மஸ் கேக் வெட்டி… கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் கேக்குகள் வழங்கி அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார்..
தொடர்ந்து.. அங்கு செயல்பட்டு வரும் ‘பான் செக்கியூர்’ முதியோர் இல்லத்திற்கு.. சென்று அரவை இயந்திரம்..புத்தாடைகள்.. இனிப்புகள் வழங்கினார்..
அப்பொழுது அங்கிருந்த முதியோர்கள் அனைவரும் முன்னாள் அமைச்சருக்கு ரோஜாப்பூ கொடுத்து ஆசி வழங்கினர்..
இந்த நிகழ்வில்.. குடவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் பாப்பா சுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கிளாரா செந்தில், துணைத் தலைவர் எம். ஆர். தென்கோவன்,பாப்பா போத்தன்
இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை, திருவாரூர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கலியபெருமாள், திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சின்ராஜ்..உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள் உறுப்பினர்கள்.. பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

















