குத்தாலம் அருகே திருவாலங்காடு மகா மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, செடில் சுற்றி பக்தர்கள் வழிபாடு, கையில் தீச்சட்டி உடன் சிவன் வேடமிட்டு ஆடிய இஸ்லாமிய இளைஞர் நடனம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது :-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு மகா மாரியம்மன் ஆலய சித்திரைத் திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, செடில் உற்சவம் மற்றும் தீமிதி திருவிழா நடைபெற்றது. இவனை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது, செடில் கம்பத்தில் வேண்டுதல் நிறைவேற குழந்தைகளை வைத்து சுற்றி வந்து பக்தர்கள் வழிபாடு செய்தனர். தொடர்ந்து சிவசக்தி தாண்டவம் என்ற ஆன்மீக நடன நிகழ்ச்சி நடைபெற்றது, இஸ்லாமிய இளைஞர் கிங் பைசல் என்பவர் தலைமையில் சிவன் பார்வதி கருப்பசாமி வேடமிட்டு நடன கலைஞர்கள் கையில் தீச்சட்டி ஏந்தி நடனமாடிய காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
