டில்லியில் நடைபெற்ற ஒரு முக்கியமான மாநாட்டில் அவர் உரையாற்றியபோது கூறியதாவது:
“நான் சமீபத்தில் ஜப்பான் மற்றும் சீனாவுக்கு சென்றுவிட்டு நேற்று இரவு தான் திரும்பி வந்தேன். அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களை விரைவில் தொடங்கவிருக்கிறோம். அரிய கனிமங்களுக்கான தேவையை பூர்த்தி செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்படும் மிகச் சிறிய சிப் உலகை மாற்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை.” எனத் தெரிவித்தார்.
மேலும், செமிகண்டக்டர் திட்டங்களுக்கு 18 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், உலகம் இந்தியாவை நம்பிக்கையுடன் கவனித்து வருவதாகவும் கூறினார்.
அவர் தொடர்ந்தும், “கடுமையான சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிலேயே நாட்டின் முதல் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த துறையில் இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.” என்று வலியுறுத்தினார்.