சென்னை :
திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த நான்கு நாட்களாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, ‘ஆஞ்சியோ’ பரிசோதனை (Angiography) மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“முதல்வருக்கு ‘ஆஞ்சியோ’ பரிசோதனை நடந்தது. அவர் நலமா தான் இருக்கார். எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவாங்கனு மருத்துவர்களே சொல்லணும்”
என்றார்.
மருத்துவமனையில் இருந்தபடியே ஸ்டாலின் அரசு பணிகளை தொடர்ந்து கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல்வரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து அதிகாரபூர்வமாக தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.