பி.டி.ஆர்க்கு அறிவுரை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

தகவல் தொழில்நுட்பத் துறைக்கு குறைவாக நிதி ஒதுக்கப்படுவதாகவும், தன்னிடம் நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளானது.

இந்நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில்,”தமிழ்வேள்” பி.டி.ராஜன் வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் பெற்றுக்கொண்டார்.

இதில் பேசிய முதல்வர் ஸ்டாலின், வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு எரிகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்லாற்றல் மிகுந்தவர் என்றும், ஆனால் அவரது சொல்லாற்றல், பலமாக இருக்கவேண்டுமே தவிர, பலவீனமாக மாறிவிடக் கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

Exit mobile version