செங்கல்பட்டு ஒரு நாள் விடுபட்ட மழை மீண்டும் கனமழையால் பொதுமக்கள் அவதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் டிட்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது; சில நாட்களில் மழை விட்டு விட்டு பெய்தாலும் செங்கல்பட்டு மாவட்டத்தில், சில பகுதிகளில் கனமழை பெய்துள்ளது, இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த நிலையில் தற்போது பள்ளிகள் எப்பொழுதும் போல் திறக்கப்பட்டுள்ளது .
ஒரு நாள் மழை விடுபட்ட நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது
அதாவது செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது குறிப்பாக ஒரு சில இடங்களில் லேசான மழையும் ஒரு சில இடங்களில் சாரல் மழையும் பெய்து வருகிறது.
இதனால் பள்ளி கல்லூரி மற்றும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றன.
மேலும் மழை நீடித்தால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று கருதப்படுகிறது.

















