மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர் .

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவிலில் நடைபெற்று வந்த 18 நாள் பங்குனி திருவிழா இன்றுடன் நிறைவடைவதை ஒட்டி இன்று மாலை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது 18 தினங்களில் ஒவ்வொரு தினமும் இரவு வெவ்வேறு வாகனங்களில் ராஜகோபாலசாமி வீதி உலா நடத்தப்பட்டு வந்தது இதை நிறைவாக இன்று தேரோட்டம் நடத்தப்பட்டது ருக்மணி சத்யபாமா தாயார் சமேதராக தேரில் எழுந்தருளி ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இன்று மாலை 5 மணிக்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கொடி அசைத்து தேர் வடம் பிடித்து துவங்கி வைத்தார் . அதனை தொடர்ந்து பக்தர்கள் தேரினை வடம்பிடித்து இழுத்தனர் . கோபாலசமுத்திரம் தெற்கு வீதி மேலவீதி வடக்கு வீதி வழியாக வந்து இரவு 7:30 மணிக்கு தேரோட்டம் நிறைவடைந்தது ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் பங்கேற்று தேரினை கோபாலா கோவிந்தா என்ற பக்தி கோசமுழங்க வடம் பிடித்து இழுத்தனர்.

Exit mobile version