சக்கரபாணி திருக்கோயில்

தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் அமைந்துள்ள வைணவக்கோயில் ஆகும். சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாய்ந்த கோவில் ஸ்ரீ சக்கரபாணி கோவில் ஆகும்.

காவிரியாற்றுக்குச் சற்று தெற்கில் உள்ள இக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் சக்கர வடிவமான தாமரைப்பூவில், அறுகோண எந்திரத்தில் எட்டு ஆயுதங்களை எட்டுத் திருக்கரங்களிலும் ஏந்திக் காட்சியளிக்கிறார்.

சூரியன் பூசித்ததால் இத்தலம் பாஸ்கர சேத்திரம் என்றழைக்கப்படுகிது. சக்கரபாணி சுவாமி தனிக்கோயில் கொண்டு வீற்றிருப்பது இத்தலத்தில் மட்டுமே வேறு
எங்கும் இல்லை.

ஒரு சமயம் திருக்குடந்தையில் தங்கித் தவம் செய்த தேவர்களும் முனிவர்களும், அசுரர்களால் துன்புறுத்தப்பெற்றார்கள். அவர்களைக் காக்கவேண்டி
காவிரியில் இருந்த சுதர்சன சக்கரத்தினைக் கொண்டு திருமால், அசுரர்களை வீழ்த்தித் தேவர்களையும், முனிவர்களையும் காப்பாற்றினார். சக்கரத்தினைக் கரத்தில் கொண்டு விளங்குவதால் சக்கரபாணி என்று பெயர் பெற்றார்.

இந்த திருத்தலத்தில் சூரியதேவனின் ஆணவத்தினை அடக்க விஷ்ணு சக்கர ரூபம் கொண்டுள்ளார்.வைணவ திருத்தலங்களில் சூர்ய ஸ்தலம்.
தஞ்சையை மையமாக கொண்டு ஆட்சி புரிந்த பல சோழ மன்னர்களால் இக்கோவில் அவ்வப்போது புனரமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இந்த கோவிலின் இறைவன் சக்கரபாணி எனவும், இறைவி விஜயவல்லி தாயார் எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

புராண, இதிகாசங்களின் படி ஜலந்தராசுரன் எனும் அரக்கனை வாதம் செய்ய திருமால் ஏவிய சக்ராயுதம் ஜலந்தாசுரன் சேர்த்து பாதாள லோகத்தில் இருந்த அதனை அசுரர்களையும் வதம் செய்த பிறகு, காவிரி நதிக்கரையோரம் இருக்கும் புண்ணிய ஸ்தலமான கும்பகோணத்தில் தவம் புரிந்து கொண்டிருந்த பிரம்ம தேவரின் கைகளில் வந்து விழுந்தது

சக்தி வாய்ந்த இந்த சக்ராயுதத்தை கும்பகோணத்தில் ஓரிடத்தில் பிரதிஷ்டை செய்தார் பிரம்ம தேவன். இந்த சக்ராயுதத்தால் இருந்து வெளிப்பட்ட ஒளி சூரியனின் ஒளிப்பிரவாகத்தை மிஞ்சும் வகையில் இருந்ததால் பொறாமை கொண்ட சூரிய பகவான் தனது ஒளி அளவை கூட்டிய போது, ஒட்டு மொத்த சூரிய ஒளியையும் தன்னுள் உள்வாங்கிக்கொண்டது

இந்த சக்ராயுதம். தனது கர்வம் நீங்க பெற்ற சூரிய பகவான், வைகாசி மாதத்தில் மூன்று கண்கள், எட்டு கைகளுடன் அக்னிப்பிழம்பாக தோன்றிய ஸ்ரீ சக்கரபாணியின் காட்சி கிடைக்க பெற்று, இழந்த தனது ஒளியை மீண்டும் பெற்றார் சூரிய பகவான். தனது நன்றியை வெளிப்படுத்த சூரிய பகவான் கட்டிய கோவில் தான் இந்த சக்கரபாணி கோவில்.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் திருவிழாவில் கலந்து கொண்டவர்கள், அதில் பங்கேற்ற புண்ணியத்தை இந்த
கோவிலின் இறைவனான சக்கரபாணிக்கே சமர்ப்பித்து வேண்டிக்கொள்வதால் நமக்கு மிகுந்த நன்மைகளை ஸ்ரீ சக்கரபாணி உண்டாக்குவார் என்பது ஐதீகம்.
முன்னொரு காலத்திலே அந்தணர் ஒருவர் தனது தந்தையின் அஸ்தியைக் கங்கையில் கரைக்க வேண்டும் என்று அதனை எடுத்துக்கொண்டு தன் சீடருடன் காசிக்குக் கிளம்பினார். காசிக்குச் செல்கின்ற வழியில் அவர்கள் கும்பகோணத்தை அடைந்தார்கள்.

தன் தந்தையின் அஸ்தி கலசத்தைச் சக்கர படித்துறையில் வைத்துவிட்டு அந்தணர் குளிக்கச் சென்றுள்ளார். அப்பொழுது அவருடைய சீடருக்குப் பசி எடுத்துள்ளது. தனக்கு ஏதேனும் உணவு கிடைக்க வழி உள்ளதா? என்று தேடியுள்ளார். அந்தணர் கையில் வைத்திருந்தது என்னவென்று தெரியாத சீடர். அவர் படித்துறையில் வைத்துவிட்டுச் சென்ற கலசத்தைப் பார்த்துள்ளார்.

அதைப் பிரித்துப் பார்த்தால் அதற்குள்ளே தாமரைப்பூ இருந்துள்ளது, அதனால் கட்டி வைத்துவிட்டார். அதன்பிறகு அந்தணருடன் அவர் காசியை அடைந்தார். காசியிலே அந்தணர் அஸ்தி கலசத்தைத் திறந்து பார்த்த பொழுது அதற்குள்ளே எலும்பும், சாம்பலும் இருப்பதைக் கண்ட அந்த சீடர்,
அந்தணரை நோக்கி கும்பகோணத்தில் சக்கர படித்துறையில் இந்த கலசத்தை நான் பிரித்துப் பார்த்த பொழுது தாமரைப்பூ இருந்ததே இப்போது எப்படி இதற்குள் எலும்பும், சாம்பலும் என்று கேட்டார்.

அதை கேட்ட அந்தணர் வியப்படைந்து அவனை அழைத்துக் கொண்டு மீண்டும் கும்பகோணத்திற்கு வந்து சக்கர படித்துறையில் அஸ்தி கலசத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதற்குள் தாமரைப்பூ இருந்தது.

கும்பகோணத்தில் காவிரியின் ஒரு பகுதியில் இருக்கின்ற சக்கரப் படித்துறை காசியை விடச் சக்தி வாய்ந்தது என்பதற்கு இதுவே பெரிய உதாரணம்
மூன்று கண்களுடன் ஸ்ரீ சக்கரபாணி இருப்பதால் சிவபெருமானை போல இவருக்கும், பூ துளசி, குங்குமம் போன்றவற்றுடன் வில்வ இலைகளாலான அர்ச்சனையும் செய்யப்படுகிறது.

சூரிய பகவான், பிரம்ம தேவர், அக்னி பகவான், மார்க்கண்டேயர் போன்றோர் வழிபட்ட தலம் இதுவே ஆகும். இந்த தலத்தில் உலகிற்கே ஒளியாக இருக்கும் சூரிய பகவானே வழிபட்டு நன்மையடைந்ததால் ஜாதகத்தில் சூரியனின் நிலை பாதகமாக இருப்பவர்கள் வழிபடுவதற்கான பரிகார தலமாக இருக்கிறது.

உடலில் வலது கண் சூரியனின் ஆதிக்கம் நிறைந்ததாகும் வலது கண்ணில் பிரச்சனை உள்ளவர்கள், கண் பார்வை கோளாறுகள் உள்ளவர்களும் இந்த ஆலய இறைவனான ஸ்ரீசக்கரபாணியை வழிபடுவதால் மேற்கூறிய பிரச்சனைகள் நீங்கும். ஜாதகத்தில் ஏழரை சனி,
அஷ்டம சனி, ராகு கேது கிரகங்களின் பாதகமான நிலை போன்றவற்றால் கஷ்டங்களை அனுபவிப்பவர்கள், இங்கு வந்து வழிபட்டு நன்மைகளை பெறலாம்.

சுதர்சன ஹோம பூஜையை இக்கோவில் செய்பவர்களுக்கு எதிரிகள் தொல்லை, துஷ்ட சக்திகள் பாதிப்பு ஆகியவை நீங்கி சுபிட்சங்கள் ஏற்படும். புத்திர
பாக்கியம் இல்லாதவர்கள் இக்கோவிலில் சக்ரபாணி, விஜயவல்லி தாயாரை வணங்கி, பக்தியுடன் கோவிலை பிரதட்சிணம் வந்தால் பிள்ளை பேறு கிட்டும் என்பது ஐதீகம்

Exit mobile version