சீர்காழி அருகே பட்டப்பகலில், திறந்திருந்த தேனீர் கடையில், கல்லாப்பெட்டியை திறந்து ஒன்பதாயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற இளைஞர், சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சூரைக்காடு என்ற இடத்தில் நவகிரக கஃபே என்ற தேநீர் விடுதி அமைந்துள்ளது. இந்த கடையில் நேற்று பகலில் வியாபாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது, கடை வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த மேலாளர், இயற்கை உபாதைக்காக வெளியே சென்றுள்ளார், வயதான டீ மாஸ்டர் மட்டுமே கடையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், டீ மாஸ்டர் கவனம் கொள்ளாத வகையில் நைசாக கல்லாப்பெட்டி திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் ஒன்பதாயிரம் மற்றும் சில்லறை பணங்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். முதல் நாள் வசூலும் கடையில் காணாமல் போயிருந்த நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்ம நபர் திருடியது தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மர்ம நபர் சீர்காழி அருகே புதுத்துறை கன்னி கோயில் தெருவை சேர்ந்த முருகவேல் என்பது கண்டறியப்பட்டது. தப்பி ஓடிய முருகவேல் பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
