காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழக நீர்வள ஆதாரத்துறை செயலாளர் ஜெ.ஜெயகாந்தன், காவிரி தொழில் நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதிநீர்ப் பிரிவு தலைவர் இரா.சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் கலந்துகொண்டனர்.

கர்நாடக அணைகளின் நீர் இருப்பும், வரத்தும் கணிசமான அளவில் தொடர்ந்து வருவதை தமிழக பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். எனவே உச்சநீதிமன்ற உத்தரவின்பட் தமிழகத்துக்கு டிசம்பர் மாதத்துக்கு வழங்கப்பட வேண்டிய 7.35 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் வழங்க உத்தரவிடுமாறு அவர்கள் கோரினர். மேலும் கர்நாடகம் உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளில் அங்கீகரிக்கப்படாத நீரேற்று பாசனத் திட்டங்களை செயல்படுத்தி சாகுபடி செய்வதை தடுக்க ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். இதையடுத்து காவிரியில் தமிழகத்திற்கு டிசம்பர் மாதத்துக்கு 7 புள்ளி 35 டிஎம்சி தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version