சவுதியில் பேருந்து–டேங்கர் மோதல் ; 42 இந்தியர்கள் பலி

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இந்தியர்கள் பயணித்த பேருந்து, எண்ணெய் டேங்கர் லாரியுடன் மோதியதில் ஏற்பட்ட தீவிபத்தில் 42 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் தெலங்கானாவைச் சேர்ந்த 18 பேர் அடங்குவர்.

மெக்காவில் தொழுகையை முடித்துப் மதீனாவுக்கு பேருந்தில் புறப்பட்ட யாத்திரிகர்கள், அதிகாலை 1.30 மணியளவில் மதீனா அருகிலுள்ள முப்ரிஹாத் பகுதியில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. எதிரே வந்த எண்ணெய் டேங்கர் லாரி திடீரென பேருந்தை மோதியதாக கூறப்படுகிறது.

மோதல் பலத்ததால் பேருந்தில் உடனடியாக தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்தவர்கள் தகவல் அளித்ததும், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனால் பல பயணிகள் அந்நேரத்தில் தூக்கத்தில் இருந்ததால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டதாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேசத்துக்கு இலக்கற்ற விபத்தில் 11 பெண்கள், 10 குழந்தைகள் உள்ளிட்ட 42 இந்தியர்கள் உடல்கருகி உயிரிழந்துள்ளனர். அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்காக ஜெட்டா இந்திய தூதரகத்தில் 24×7 கட்டுப்பாட்டு மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல் பெற உரிய இலவச தொடர்பு எணும் வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version