BPCL பங்குகள் 26% வரை உயர வாய்ப்பு – நோமுரா தரகு நிறுவனம் அறிக்கை

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) பங்குகள் எதிர்காலத்தில் 26% வரை உயரக்கூடும் என நோமுரா தரகு நிறுவனம் எதிர்பார்க்கிறது. நிறுவனத்தின் இலக்கு விலை ரூ.435 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள விலையுடன் ஒப்பிடுகையில் இது முக்கியமான உயர்வு ஆகும்.

மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனமான BPCL, தனது செயல்திறனாலும், நியாயமான சந்தைப்படுத்தல் மற்றும் சுத்திகரிப்பு செயல்பாடுகளாலும் முதலீட்டாளர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

சிறந்த செயல்திறன் – முன்னணி சுத்திகரிப்பு நிறுவனமாக BPCL :

நோமுரா தரகு நிறுவனத்தின் மதிப்பீட்டுப்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் BPCL சுத்திகரிப்பு பயன்பாடு சராசரியாக 106% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL) ஆகிய நிறுவனங்களின் 96–99% இடையே உள்ள பயன்பாட்டைவிட குறிப்பிடத்தக்க மேன்மையாகும்.

மேலும், BPCL சுமார் 84% வரை அதிகபட்ச வடிகட்டுதல் விளைச்சலை (refining yield) பதிவு செய்துள்ளது. இது HPCL மற்றும் IOCL நிறுவனங்களின் 73–77% இடையே உள்ள விளைச்சலுடன் ஒப்பிடும்போது சிறந்த நிலையாகும்.

உயர்ந்த லாபம் எதிர்பார்ப்பு :

2024–25 நிதியாண்டில் BPCL நிறுவனம் சுத்திகரிப்பு லாபமாக (GRM) $6.8 பதிவு செய்துள்ளது. இந்த எண்ணிக்கை, 2025–26 நிதியாண்டில் $8.4 ஆக அதிகரிக்கும் என நோமுரா கணித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் லாபவாய்ப்பு மிகவும் உயரமாகும்.

HPCL, IOCL பங்குகளுக்கும் பரிந்துரை :

மற்ற எண்ணெய் நிறுவனங்களான HPCL மற்றும் IOCL பற்றிய பார்வையிலும் நோமுரா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்நிறுவனங்களும் “வாங்கத்தக்கவை” என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சுத்திகரிப்பு செயல்திறன், சந்தைப்படுத்தல் திறன் மற்றும் மீதமுள்ள பண்புகளைக் கொண்டு BPCL மற்ற நிறுவனங்களை விட சிறப்பாக உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version