திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக… திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ‘திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது
கடந்த 18.03. 2018 அன்று திருவாரூர் அன்றைய வட்டாட்சியர் நடத்திய சமாதான பேச்சுவர்த்தை முடிவுகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.. என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.
ஆட்டோ நிறுத்தத்தில் 50 ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து அப்பொழுது ஆட்டோ இயக்குவது தொடர்பாக சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது.
அதில் திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழிற் சங்கத்தினருக்கு 12, LPF சங்கத்திற்கு 11 ஆக 23 ஆட்டோக்களும், பழைய பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஆரூர் சோழன் ஆட்டோ சங்கத்தினர் மற்றும் அண்ணா தொழிற் சங்கத்தினருக்கு சேர்த்து 23 ஆட்டோகளும்… புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு இடம் அளித்த தியாகபெருமாநல்லூர் பகுதியினருக்கு 4 ஆட்டோக்களும் இயக்கப்படுவதற்கு அன்றைய சூழலில்.. வட்டாட்சியர் சமாதான பேச்சு வர்த்தை நடத்தி அறிவித்தார்.
இந்த நிலையில் தற்போது சங்கங்களுக்குள் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளதால்.. திமுக தோழமை தொழிற்சங்கத்தினர் திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இந்த முற்றுகை போராட்டத்தில் தமிழக அரசு எதிர்த்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
திருவாரூர் மாவட்ட ஆட்டோ தொழில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் ஆட்டோ தொ.சங்க மாவட்ட தலைவர் அரிகரன்,ஆட்டோ தொ.சங்க மாவட்ட பொருளாளர் அன்புமணி , சிஐடியு மாவட்ட செயலாளர் ஹனிபா முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்… சி ஐ டி யு மாவட்ட தலைவர் ஜோதிபாசு, சி ஐ டி யு மாவட்ட பொருளாளர் கஜேந்திரன், சிஐடியு மாவட்ட துணை தலைவர் வீரபாண்டியன்,தையல் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆனந்தி, துணை தலைவர் ரேவதி உள்ளிட்ட ஆட்டோ தொழிலாளர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்..


















