மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத்தை சிதைத்து , கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசையும் அதற்கு துணை போகும் அ.தி.மு.க வையும் கண்டித்தும் தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் திமுக கூட்டணி கட்சி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் மத்திய பா.ஜ.க அரசையும் அதற்கு துணை போகும் அ.தி.மு.க வையும் கண்டித்து கண்டன முழக்கம் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வை. சிவபுண்ணியம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கொண்டு வந்த அந்த 100 நாள் திட்டத்தை முடக்க நினைக்கும் மக்கள் விரோத பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இந்தத் திட்டத்தை முடக்க திமுக கூட்டணி கட்சிகள் ஒருபோதும் விடமாட்டோம் பாஜகவை ஆதரிக்கும் அதிமுகவுக்கு பாடம் புகட்டுவதற்காக பாரத பிரதமர் மோடிக்கு சம்மதம் பேசுகிற அதிமுக எடப்பாடி பழனிச்சாமிக்கு பாடம் புகட்ட வேண்டும் அனைவரும் திமுக கூட்டணி கட்சிக்கு ஆதரவு தர வேண்டும் என பேசினார்..

















