போதை மாஃபியாவுக்கு எதிரான அரசின் செயலின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் திமுக அரசை கண்டித்து பாஜக இளைஞரணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் லக்ஷ்மாங்குடி பகுதியில் பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஜான் பேக்ரெட் தலைமையில் போதை மாஃபியாவுக்கு எதிரான அரசின் செயலின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் அதிகரித்து உள்ள போதைப்பொருள் பழக்கத்தை தடுக்க முடியாமல் தோல்வி அடைந்துள்ள திமுக அரசை கண்டித்தும், போதை மாஃபியாவுக்கு எதிரான அரசின் செயலின்மை மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து பேசிய பாஜக மாவட்டத் தலைவர் செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி அமைய உறுதி ஏற்போம் என பேசினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாவட்ட பொதுச் செயலாளர் சங்கர் மற்றும் 200க்கும் மேற்பட்ட அதிமுக, பாஜக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
