மயிலாடுதுறையில் பாஜக மாநில தலைவர் பிறந்தநாள் அக்கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது

பாஜக மாநில தலைவர் நாயினார் நாகேந்திரன் 65 ஆவது பிறந்தநாள் இன்று கட்சியினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை நகர பாஜக சார்பில் மாநில தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து சிறப்பாக வழி நடத்தி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்க வேண்டும் , பீகார் மாநிலத்தில் பாஜக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என பாரத தாய்க்கு ஏராளமான நிர்வாகிகள் தீபாராதனை எடுத்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். மேலும் முன்னாள் பாஜக மாவட்ட துணை தலைவர் மோடி கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Exit mobile version