சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களை அசிங்கமாக பேசியதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வை பதவி நீக்கம் செய்ய கோரி கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சட்ட மன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உட்பட 300 க்கும் மேற்பட்ட பாஜகவினர் கைது
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்ட நிகழ்சி நடைபெற்ற போது பாரத் மாதாக்கி ஜே என கோஷம் எழுப்பிய பக்தர்களை அசிங்கமாக பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வை பதவி நீக்கம் செய்ய கோரி கல்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் தக்கலை பகுதியில் பாஜக மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.டி சுரேஷ் தலைமையில் தர்ணா போராட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டது போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் போராட்டத்திற்கு அந்த பகுதியில் குவிந்த பாஜக மாவட்ட தலைவர் ஆர்.டி சுரேஷ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உட்பட பாஜகவினர் 300 மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர் அப்போது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட தலைவர் போராட்டம் குறித்து விளக்கி பேசுவதற்குள் போலீசார் கைது செய்ய முயன்றதால்
போலீசுக்கும் பாஜக வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்து பேருந்தில் ஏற்றிய நேரத்தில்
போலீசார் பாஜக வினரை தள்ளிய தால் போலீசாருக்கு ம் பாஜக வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது தொடர்ந்து பாஜகவினரை கைது செய்தனர்.

















