விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு

1996, 2010 ஆகிய ஆண்டுகளிலும் இதுபோன்ற பிரிவுகள் ஏற்பட்டன பலர் முக்கியஸ்தர்கள் அதிமுகவை விட்டு விலகி திமுகவிற்கு சென்றனர். ஆனால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போதும் திமுகவுக்கு எதிராக மிகப் பெரிய அலை எழுந்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மகனைப் பற்றியே சிந்தித்தார்; மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. மகனின் வளர்ச்சியே அவருக்கு முக்கியம், மக்களின் நலனுக்காக எதையும் செய்யவில்லை,” என பாஜக மாநில துணைத்தலைவர் ஜெயப்ரகாஷ் பேட்டி.

விக்கிரவாண்டியில் பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அசோகபுரி பகுதியில் பாஜக சார்பில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் ஜெயப்ரகாஷ், மாநில துணை பொதுச் செயலாளர் ஏ.ஜி.சம்பத், மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து பேட்டியளித்த ஜெயப்ரகாஷ் அவர்கள்,

“வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக பூத்துகளை வலிமைப்படுத்தும் நோக்கில் இந்த மாதிரியான கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. திமுகவின் மக்கள் விரோத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அதிமுகவுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதற்கான ஆலோசனை கூட்டமே இது,” என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:
“திமுக எங்களைப் பார்த்து அச்சப்படுகிறது. அண்ணா திமுகவுடன் இணைந்து ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம். இந்த கூட்டணியே வரும் தேர்தலில் வெற்றி பெறும். கூட்டணி அமைப்புகள் குறித்து மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் அமிர்ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஆலோசித்து முடிவெடுப்பார்கள் தற்பொழுது உள்ள கூட்டணி வலுவான கூட்டணி கண்டிப்பாக வருகின்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும்.”

எஸ்.ஐ.ஆர். பணியில் திமுக குற்றச்சாட்டுகள் குறித்து அவர்,
“தமிழக அரசு அதிகாரிகளே வாக்காளர் திருத்தப் பணியில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எப்படி முறைகேடில் ஈடுபட முடியும்? திமுக அரசு தனது சொந்த அதிகாரிகளை நம்பவில்லையா?. தமிழக அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு எந்த சலுகைகளும் செய்யவில்லை, வாக்குறுதிகளும் நிறைவேற்றவில்லை. இவர்கள் தவறு செய்கிறார்கள் என முதல்வர் கூறுவது அபத்தம்,” என்றார்.

அதிமுகவில் ஏற்பட்ட பிரிவினை குறித்து அவர் மேலும் கூறியதாவது,
“1996, 2010 ஆகிய ஆண்டுகளிலும் இதுபோன்ற பிரிவுகள் ஏற்பட்டன பலர் முக்கியஸ்தர்கள் அதிமுகவை விட்டு விலகி திமுகவிற்கு சென்றனர். ஆனால் அதிமுக மீண்டும் ஆட்சியை பிடித்தது. தற்போதும் திமுகவுக்கு எதிராக மிகப் பெரிய அலை எழுந்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் மகனைப் பற்றியே சிந்தித்தார்; மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. என பாஜக மாநில துணைத்தலைவர் ஜெயப்ரகாஷ் தெரிவித்தார்.

Exit mobile version