பிக்பாஸ் நிகழ்விற்கு தடை விதிக்க வேண்டும் ஏன்? – அர்ஜுன் சம்பத்

கூட்டணி கட்சிகளை திமுக அடக்கி வைத்திருப்பத போல பா.ஜ.க ஒரு போதும் செய்யாது என தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன்சம்பத், கலாச்சார சீரழிவை ஏற்படுத்தி வரும் பிக்பாஸ் நிகழ்விற்கு தடை விதிக்க வேண்டும் என வலியறுத்தியள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத், பள்ளிபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற கொங்குதிருப்பதி கோயிலில் பக்தர்கள் வழிபாடு மேற்கொள்ள எவ்வித தடையும் இல்லை என நீதிமன்றம் கூறிய பிறகும் மாவட்ட நிர்வாகமும், இந்து அறநிலையத்துறையும் கோயிலை திறக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கண்டனத்திற்குரியது என்றார்.

கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தை காரணம் காட்டி தமிழகத்தில் எதிர்கட்சிகளை பிரச்சாரம் செய்ய விடாமல் திமுக முடக்க நினைப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதே போன்ற பிரச்சனையில் நடிகர் அல்லுஅர்ஜுன் கைது செய்யப்பட்டது போல, விஜய் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திய அர்ஜுன்சம்பத், தேர்தல் ஆணையம் தமிழக வெற்றி கழகத்தை தடை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்வு கலாச்சார சீர்கேடு என்பதால் அந்நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இதற்காக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி பலம் வாய்ந்திருப்பதாகவும், திமுக தன்னுடைய கூட்டணி கட்சிகளை அடக்கி வைத்திருப்பது போல பாஜக எப்போதும் செய்யாது என்றார்.

Exit mobile version