கூகுளின் வருடாந்திர டெக் மாநாடு Google I/O 2025, மே 20 மற்றும் 21 தேதிகளில் கெலிஃபோர்னியாவில் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் கூகுள் நிறுவனம் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அந்த அறிவிப்புகள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலானவை என்பதே குறிப்பிடத்தக்கது.
புதிய AI தேடல் அனுபவம் :
அமெரிக்க பயனர்களுக்காக Gemini AI பயன்படுத்தி, நிதி, விளையாட்டு, வாழ்க்கை முறைகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு விரிவான மற்றும் விளக்கப்படத்துடன் கூடிய தேடல் முடிவுகளை வழங்கும் புதிய செயல்பாடு அறிமுகமாகியுள்ளது.
Google Beam – Project Starline இன் புதிய வடிவம்:

முன்னதாக “Project Starline” என அறிமுகமானது, இப்போது Google Beam என பெயர்மாறி, 3D வீடியோ அழைப்பு தொழில்நுட்பத்தில் புதிய பரிமாணங்களை தொடங்கியுள்ளது. HP சாதனத்தில் ஒளிப்புல காட்சி மற்றும் 6 கேமராக்கள் மூலம் நபரின் 3D படம் உருவாகிறது. நிறுவனங்களான Deloitte, Duolingo, Salesforce ஆகியவை இதனை ஏற்கனவே தங்களது அலுவலகங்களில் நிறுவ ஆர்வம் காட்டுகின்றன.
Imagen 4 மற்றும் Veo 3 :
Google-ன் உரை-பட AI ஜெனரேட்டரான Imagen 4 மற்றும் வீடியோ ஜெனரேட்டரான Veo 3 முக்கிய மேம்பாடுகளுடன் வெளியாகியுள்ளது. இவை சதுரம், நிலப்பரப்பு போன்ற வடிவங்களில் ஏற்றுமதி செய்யும் திறன் பெற்றவை.
AI திரைப்படத் தயாரிப்பு :
சிறிய வீடியோக்களை ஒன்றாக இணைத்து நீளமான காட்சிகளை உருவாக்கும் புதிய AI திரைப்பட தயாரிப்பு செயலி ஒன்றை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இது படைப்பாற்றல் உலகில் பெரிய புரட்சியை ஏற்படுத்தக்கூடும்.
Gemini 2.5 Pro :
Gemini AI தளத்தின் மேம்பட்ட பதிப்பான Gemini 2.5 Pro தற்போது வெளியாகியுள்ளது. இது கூகுளின் தேடல்களை மேலும் திறமையாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Project Aura ஸ்மார்ட் கண்ணாடி :
Xreal மற்றும் Google இணைந்து உருவாக்கும் புதிய Project Aura ஸ்மார்ட் கண்ணாடிகள், கலப்பு ரியாலிட்டி சாதனங்களுக்கு ஆன்ட்ராய்ட் தளத்தை பயன்படுத்துகிறது. ஸ்மார்ட் போன்களைப் போலவே செயல்படும் இந்த கண்ணாடிகள் எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வழிகாட்டியாக இருக்கும்.

Gemini Chrome Integration :
Google Chrome உலாவியில் “Gemini” பொத்தான் மூலம் வலைப்பக்கங்களை சுருக்கி அல்லது தெளிவுபடுத்தும் புதிய வசதி வரவுள்ளது. இது AI Pro மற்றும் Ultra சந்தாதாரர்களுக்காகவும் வழங்கப்படும்.
AI Ultra சந்தா – மாதம் $250 :
Google-ன் மிகவும் மேம்பட்ட AI மாதிரியான AI Ultra சந்தா, மாதத்திற்கு $250 என்ற கட்டணத்தில் வழங்கப்படுகிறது.
Search Live மற்றும் Gemini Live :
Search Live எனும் புதிய செயற்கை நுண்ணறிவு தேடல் உதவியாளர் மற்றும் Gemini Live திரைப்பகிர்வு வசதிகள் இலவசமாக அனைவருக்கும் வழங்கப்படுகின்றன.
Google Meet – மொழிப்பெயர்ப்பு வசதி :
Google Meet தளத்தில், உங்கள் பேச்சை மற்றொரு நபரின் விருப்ப மொழியில் நேரடியாக மொழிபெயர்க்கும் வசதி அறிமுகமாகியுள்ளது. தற்போதைக்கு ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் மட்டுமே ஆதரிக்கப்படுகின்றன.
Gmail புதிய அம்சம் :
Gmail-இல் வரும் மின்னஞ்சல்களுக்கு AI ஆதரவுடன் பதிலளிக்கும் Smart Reply அம்சம் ஜூலை மாதத்தில் Google Labs மூலம் அறிமுகமாக உள்ளது.
AI ஷாப்பிங் :
செயற்கை நுண்ணறிவு ஆதரவுடன் கூடிய ஷாப்பிங் அனுபவத்திற்கு கூகுள் புதிய வசதிகளை வழங்குகிறது. விரைவாக தேவையான பொருட்களை கண்டறிய உதவும் இவைகள் பயனர்களை ஈர்க்கக்கூடியவை.