திருவள்ளூர் அருகே இந்தியன் வங்கி ஊரக சுயவேளைவாய்ப்பு பயிற்சி மையம் கட்டுவதற்கான பூமி பூஜை

திருவள்ளூர் அருகே ரூ.3.83 கோடி மதிப்பீட்டில்
இந்தியன் வங்கி ஊரக சுயவேளைவாய்ப்பு பயிற்சி மையம் கட்டுவதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் கவிதா,

திருவள்ளூர் மாவட்டம் கரிகலவாக்கம், பகுதியில் 10,000 சதுரஅடி பரப்பளவில் ரூ.3.83 கோடி மதிப்பீட்டில் இந்தியன் வங்கி ஊரக சுயவேளைவாய்ப்பு
பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் கவிதா, மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் பிரகாசம் ஆகியோர் கலந்து கொண்டு, கல்வெட்டு திறந்து வைத்து பூமி பூஜையை துவக்கி வைத்தனர்,

மேலும் கட்டப்படவுள்ள இந்தியன் வங்கி ஊரக சுயவேளைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மூலம் திருவள்ளூர் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் கிராமப்புற மகளிர், இளைஞர்களுக்கு தொழில் துவங்க, பல்வேறு இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும், தற்போது, பெண்களுக்கு 30 நாட்கள் இலவச ஆரி வேலைப்பாடு மற்றும் எம்ப்ராய்டரி கலைப்பயற்சி வழங்கப்படுவதாகவும்,
5ம் வகுப்பு படித்த 18 முதல் 45 வயது வரை உள்ள பெண்கள் இதன் மூலமாக பயன் பெறுவார்கள் என இந்தியன் வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version