மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் பயணிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு ரயில்வே கால அட்டவணை

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் பயணிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு வாகனம் துவக்கம் , ரயில்வே கால அட்டவணை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது:-

மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரயில் பயணிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு வாகனம் தயார் செய்யப்பட்டு இன்று துவங்கப்பட்டது. தொடர்ந்து ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு ரயில் பற்றிய விவரங்கள் அடங்கிய விழிப்புணர்வு வாகனத்தை துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து ரயில்வே கால அட்டவணை தொடர்பான நோட்டீசை பொதுமக்களுக்கு வழங்கினர். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இந்த வாகனம் சென்று பொதுமக்களுக்கு ரயில் பற்றிய விவரங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version