நவம்பர் 14 தேசிய குழந்தைகள் தினம், நவம்பர் 19 குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு தினம், நவம்பர் 20 சர்வதேச குழந்தைகள் தினத்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது இப்பேரணியினை மாவட்ட ஆட்சியர் வ. மோகனசந்திரன் துவக்கி வைத்தார் இப்பேரணி தேரடியில் தொடங்கி மன்னார்குடி முக்கிய வீதிகளின் வழியாக சென்று தூயவளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவுற்றது. குழந்தை திருமணம் நடைபெறுதல் தடுத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுத்தல், 14 வயதிற்கு உட்பட்ட உறுதிப்படுத்துதல், அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதை குழந்தை தொழிலாளர் உருவாக்குதல், மது போதைக்கு அடிமையாதல் தடுத்தல் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி முழக்கங்கள் எழுப்பினர்


















