அடேங்கப்பா இத்தனை கோடியா ? கல்லா கட்டிய நகைக்கடை உரிமையாளர்கள்

சென்னை, மே 2: அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் நேற்று மக்களால் கூட்டம் அலைமோதியது. அதிகாலையிலேயே கடைகள் திறக்கப்பட்டு, பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்ட நிலையில் நள்ளிரவு 1 மணி வரை கடைகள் செயல்பட்டன.

விற்பனை 20% உயர்வு!

தங்கத்தின் விலை அதிகமானாலும், விற்பனை கடந்த ஆண்டை விட 20% அதிகரித்ததாக தமிழக தங்கம், வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் தெரிவித்தார். ஒரே நாளில் மட்டும் ரூ.14,000 கோடிக்கு மேல் விற்பனை நடந்துள்ளதாக கூறினார்.

முன்பணம் செலுத்தி வாங்கிய நகைகள்:

நகை கடைகளில் கூட்டத்தை தவிர்க்க, மக்கள் முன்பணமாக செலுத்தி, அட்வான்ஸ் ரசீதை கொண்டு வந்து நகைகளை தேர்ந்தெடுத்து வாங்கினர். சிலர் பழைய நகைகளை மாற்றி புதிய நகைகளை வாங்கினர்; மொத்த சேமிப்பு திட்டம், தங்க நாணய மாற்றம் போன்ற வழிகளும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

தங்கத்தின் விலை உயர்ந்தும் விற்பனை குறையவில்லை:

மாநிலம் முழுவதும் விற்பனை வெற்றி:

சென்னை தவிர சேலம், மதுரை, நெல்லை, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட நகரங்களிலும் நகை விற்பனை அபரிமிதமாக இருந்தது. சிறு நகைக்கடைகளிலும் கூட மக்கள் கூட்டம் அதிகரித்தது.

திடீர் விலை குறைப்பு மகிழ்ச்சி ஏற்படுத்தியது:

அட்சய திருதியைக்கு பிறகு தங்கத்தின் விலை பவுனுக்கு ₹1,640 குறைந்த நிலையில், இன்று விலை:

Exit mobile version